Monday, 18 August 2025

அகநானூற்று யானைகள்

#அகநானூற்று_யானைகள்

நீண்ட முதுவேனில். மேகத்தாய் மழைப் பாலைப் பொழியாததால் பாலை நிலமான வழியது. அது தரும் வலி சுடும் பொடியானது வலியது. அவ் வழி உள்ளது ஒரு குழி. அக் குழி முன்பு நடந்து சென்ற வழிப்போக்கர்களால் தோண்டப்பட்டது. அதில் பருகுவதற்கு ஆகாத நீர் கலங்கலாய் காணப்பட்டது. அக் கலங்கல் நீரை களங்கள் பல கண்ட களிறு (ஆண் ) துதிக்கையால் முகந்தது. அந் நீரைக் கொண்டு தன் பிடியின் (பெண் யானையின்) தலையைக் கழுவி உவந்தது. எஞ்சியிருந்த சேற்றை முகந்து தன் மேல் சொரிந்து கருநிறம் மாறி செந்நிறமாய் வேறுபட்டது. பின் காதல் விலங்கிணை இரண்டும் வழி நடந்தன. நிறம் மாறிய களிறு சிவப்புக் காம்புகளைக் கொண்ட நிறம் மாறாத வெள்ளைப் பூக்கள் அசையுமாறு தீண்டி தன்னுடைய தினவைத் (அரிப்பை) தீர்க்க வழியில் உள்ள மரங்களில் உராயும். அவ் வெண்கடப்ப மர நிழலில் தங்கி இணையோடு நிழல் காயும். இச்செய்தி அகநானூறு #மணிமிடைப்_பவளம் கூறுவது. இந்த *பாலை*த் திணையைப் பாடியவர் மதுரை *மருத*னிள நாகனார்.  செய்யுள் வரிகள் பிறகு தொடர்வோம்.. நல்லது. அன்புடன், கம்கோ சித்தர்

அகநானூற்று யானைகள்

# அகநானூற்று_யானைகள் நீண்ட முதுவேனில். மேகத்தாய் மழைப் பாலைப் பொழியாததால் பாலை நிலமான வழியது. அது தரும் வலி சுடும் பொடியானது வலியது. அவ் வழி...